மகாத்மா காந்தியின் தவறுகள்

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும் பிரச்சனையான விஷயமாகத்தான் இருக்கிறது – அத்தகைய விவாதம் இதுவரைக்கும் பெரும்பாலும் கம்யூனிஸ மற்றும் ஹிந்துத்துவ பிரசுரங்களில் மட்டுமே காணப்படும் ஒன்று. ஆனால் இத்தனைக் காலம் கடந்து வந்த பின்னர் நாம் ஏன் இன்னமும் இந்தியாவின் அதிகாரபூர்வ புனித பாதுகாவலரைக் கேள்விக்குள்ளாக்குவது குறித்து இத்தனை தயக்கம் காட்ட வேண்டும்? காந்திஜியின் தவறுகள் முழுமையானதென கருதப்படாவிட்டாலும்…

Read More

இராம சேது குறித்தும் இராமர் குறித்தும்

இராமசேது குறித்து அதன் இயற்கைத்தன்மை குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னரே திண்ணையில் எழுதியிருக்கிறேன். இன்றைய சூழலில் இராம சேது குறித்தும் இராமர் குறித்தும் இத்தனை சர்ச்சைகள் வெடித்து கிளம்பியுள்ள சூழலில் இது குறித்து சில வார்த்தைகள், இராமரின் வரலாற்றுத்தன்மை; இராமருக்கோ இராமாயணத்துக்கோ வரலாற்றுத்தன்மை இல்லை என இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனம் நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கை பலரின் மத நம்பிக்கையை புண்படுத்தியுள்ளதால் அதனை அரசு திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது. இது தவறு. மத நம்பிக்கையை ஒரு அறிவியல் உண்மை…

Read More

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2

மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான் மரண உலகத்தை நோக்கிய பயணம் – மாண்ட துணையின் உயிரினை மீட்டுவரும் முயற்சி ஆகிய புராணப் படிமங்கள் உலகெங்கும் காணக்கிடைக்கின்றன. மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையிலான முயற்சி மானுடத்திற்கு மட்டுமல்ல மானுடத்தின் மனப்பிரபஞ்சத்தில் எழுந்த அதிமானுட சக்திகளுக்கும் உரியது. பாரத புராணங்களில் சத்தியவான்-சாவித்திரி அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதிகம் தெரியாத ஒரு மரணம்…

Read More

பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்

வஜ்ரா சங்கரின் கட்டுரைக்கு திரு. பீர் முகமதுவின் பதில் கட்டுரையை கண்டேன். அவரது கட்டுரையின் முதல் பகுதியில் அகவயச் சார்வுகளுக்கு ஆட்படாத ஒரு அறிஞரின் போக்குடன் யூத இனக்குழு-அதன் தோற்றம்-பரவுதல் இத்யாதி குறித்து பேசுகிறார். ஆனால் இறுதி வாக்கியம் கூறுகிறது: ‘யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள் என்னிடமுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகவே விவாதிக்கலாம்.’ சிற்றரசுகள் செய்த அடக்கு முறைகள் தகிடு தத்தங்கள் சிற்றரசுகளின் குணாதிசயங்கள் எனில் அவை எந்த அக்கால அரசுக்கும் பொதுவானதாகவே…

Read More

காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2

புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினை குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும்….

Read More

கோவா புனித விசாரணையும் தொடரும் புனித விசாரணைகளும் – 3

மிசோரம்: ரியாங்குகள் “நாங்கள் அனைத்து மனிதர்களும் இயற்கையாகவும் தமது தேர்வினாலும் பாவிகள் என நம்புகிறோம். எனவே அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்களின் இரட்சிப்பு இம்மண்ணிலும் வானின் கீழெங்கும் ஏசுவின் மீதான நம்பிக்கையலான்றி வேறெவராலும் இல்லை என நம்புகிறோம்.” மிஸோ கிறிஸ்தவ சர்வதேச கூட்டமைப்பின் இணைய தள அறிக்கை (http://www.mcgn.org/stmfaith.html) ரியாங்க் அமைப்பின் தலைவரான சய்பங்கா சில்சாரில் அண்மையில் கூறியது: “நாங்கள் மதமாற்றத்தினை கடுமையாக எதிர்ப்பதால் மிசோக்களால் தாக்கப்படுகிறோம். மிசோரம் கிறிஸ்தவ அதிகாரம் கொண்ட மாநிலம். அவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள்…

Read More