காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
புலன்களின் உள்ளீடுகள் நம்மை தாக்குகையில் நியூரான்கள் தொடர்ச்சியாக மூலக்கூறுகளை உமிழ்ந்தபடி இருப்பவை. ஆனால் இந்த புலன்களின் தாக்கங்களை நம் நரம்புமண்டல செயலியக்கம் முழுமையாக அனுமதிப்பதில்லை. இல்லையெனில் நம் மூளை தொடர்ந்து அதீத இயக்க நிலையில் செயல்பட்டு நிலையழியும். அனைத்து புலன் உள்ளீடுகளுக்கும் ஒரே அளவில் செயல்படாமல் செயலியக்கத்தினை குறைப்பதில் காபாவின் பங்கு முக்கியமானது. இந்த காபா எனும் காமா அமினோ ப்யூட்ரிக் அமிலம், க்ளூடாமேட் எனும் செயலியக்கத்தை அதிகரிக்கும் வேதிப்பொருளிலிருந்து உருவாக்கப்படுவது பரிணாமத்தின் மற்றொரு அழகிய புன்னகையாகும்….